முட்டை ஓட்டை தூக்கி வீச வேண்டாம்! கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்

0
111

மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.”முட்டை ஓடுகள்” முட்டைக்கு இணையான ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒவ்வொரு முட்டை ஓட்டிலும் தோராயமாக 40 சதவீதம் கால்சியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,முட்டை ஓடுகளில் காணப்படும் கால்சியம் கார்பனேட் அதிக அளவு எலும்புகளை உருவாக்கவும் பாதுகாப்பாகவும் உதவுகிறது.

ஓட்டுக்கும், முட்டைக்கும் இடையில் இருக்கும் முட்டை சவ்வை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.மேலும் வேகவைத்த முட்டையை உரிக்கும்போது மட்டுமே இது தெரியும். தூள் வடிவில் முட்டை ஓடுகளை உட்கொள்ளும் போது, மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

முட்டையை உண்பதற்கான சிறந்த வழி, முதலில் முட்டையை வேகவைத்து, முட்டை உரித்து விட்டு ஓட்டை உடைத்து, பின்னர் அதை உட்கொள்வதற்கு முன் பொடியாக அரைத்து சாப்பிடுவதாகும்.

இதை உணவுடன் உட்கொள்ளலாம் அல்லது சாறு அல்லது தண்ணீருடன் உட்கொள்ளலாம்.

வேறு எப்படி சாப்பிடலாம்?

முட்டை ஓட்டில் சால்மொனெல்லா பாக்டீரியா இருக்கும். இந்த பாக்டீரியா பொதுவாகவே இறைச்சிகளில் இருக்கும்.எனவே பாக்டீரியாக்களை நீக்க முட்டையை 3 – 11 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பின் ஓடுகளை மட்டும் தனியாக உடைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஈரம் நீங்க காய வைத்து பின்னர் மிக்ஸியில் மைய அரைத்து பவுடராக்கி பாலில் கலந்தோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here