முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டஉற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் முட்டை உற்பத்தியாளர்கள் இவ்வாறு குறிப்பிட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விலங்கு தீவனங்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முட்டை உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி வழங்குவதன் ஊடாக அவர்களின் செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு பணித் துள்ளார்.