முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதில் மாற்றம்

0
44

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சமத்துவமான கல்வியை, வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளைக் குறைக்கும் வகையில், பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி மேற்கொள்ளப்படும் என்று அரசு கூறுகிறது.

இதன்படி, கடந்த வருடங்களில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தற்போதைய சுற்றறிக்கையை மீளாய்வு செய்து 2025 ஆம் ஆண்டு மற்றும் அடுத்த வருடங்களில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு கல்வி அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here