நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் தொழில் தருநர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றுவருகின்றது. ஆசிய நாடுகளிலுள்ள தொழிலதிபர்களும், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.இலங்கையிலிருந்து சேவல்கட்சியின் சார்பில் ‘மாரி’காலத்தில்கூட கிடைக்காத முத்தாக கருதப்படும், சட்டம்படித்த உறுப்பினறொருவர் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
மின்சார கண்ணா என செல்லமாக அழைக்கப்படும் உறுப்பினரே இம்மாநாட்டில் பங்கேற்க இருந்தார் என்றும், இறுதிநேரத்தில் வெட்டு விழுந்துவிட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.
“ உங்களுக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. விமானப்பயணங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது” எனகூறி முத்துவை சமரசப்படுத்தியுள்ளாராம் சிக்ஸ்பேஸ் ஐயா.
எதுஎப்படியோ மாரி மீது சீற்றத்துடனேயே இருக்கிறாராம் அறுபது வயது கடந்துள்ள முத்து.
( பாண்டியன்)