முன்னாள் காதலனை புதிய காதலனுடன் சென்று கொடூரமாக தாக்கிய பாடசாலை மாணவி..?

0
31

களுத்துறை, அகலவத்தை பிரதேசத்தில் தனது புதிய காதலன் மற்றும் உறவினருடன் இணைந்து தனது முன்னாள் காதலனை தாக்கி யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில் 17 வயது யுவதியே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட யுவதி பாடசாலை மாணவி எனவும், பாடசாலை காதலனை விட்டு பிரிந்து புதிய காதலனுடன் பழக ஆரம்பித்தார். இதன் போது பழைய காதலன் கூறிய குற்றச்சாட்டின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் தனது உறவினர் மற்றும் புதிய காதலனுடன் இணைந்து தனது பழைய காதலனை அடித்து கடுமையாக தாக்கி புதிய காதலின் பலத்தை வெளிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான அகலவத்தை தாபிலிகொட பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுடன் தொடர்புடைய புதிய காதலனும் சந்தேகநபரான யுவதியின் உறவினரும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here