முன்னாள் ஜனாதிபதியின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நிறைவு!

0
180

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு இன்றுடன்(03) முழுமையாக நீக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பின் ஒரு தொகுதி இதற்கு முன்னதாக நீக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு வழங்கி வந்த எஞ்சிய படை அதிகாரிகளும் இராணுவ உத்தியோகத்தர்களும் இன்று வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் இன்று அல்லது நாளை அளவில் முழுமையாக வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளனர்.

மஹிந்தவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உத்தியோகத்தர்களின் ஒரு தொகுதியினர் மே மாதம் 2ம் திகதி நீக்கப்பட்டிருந்தனர்.

ஏனையவர்களை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு சில வாரங்களுக்கு முன்னதாக உத்தரவிட்ட போதிலும், பின்னர் அந்த உத்தரவு பல கோரிக்கைகளுக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை, மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று முன்தினம் பெவிதிறு ஹன்ட எனும் அமைப்பு கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here