முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

0
108

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன், சாவித்திரி தம்பதியினர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

மூன்று வாகனங்களுடன் வந்த இருபதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த குடும்பம் சுற்றிவளைக்கப்பட்டே இக்கைது இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்ட போது சம்பவ இடத்திற்கு பெண் பொலிசார் யாரும் வரவில்லை என்பதும் இவர்கள் இருவரும் முன்னாள் போராளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்கத்தையும் இயல்பு நிலையையும் உருவாக்குவதாக ஜெனீவாவில் அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய கைதுகளால் முன்னாள்போராளிகளும் பொதுமக்களும் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here