முப்படையிலிருந்து தப்பிச்சென்ற சுமார் 1500 பேர் கைது!

0
102

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் தொடர்ந்தும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் இம்மாதம் 1ம்திகதி வரையில் சுமார் 1500 முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்டவர்களில் 1149 இராணுவத்தினர் மற்றும் 3 இராணுவ அதிகாரிகள் , 327 கடற்படைவீரர்கள், 21 விமானப்படை வீரர்கள் ஆகியோர் உள்ளடங்குவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷhன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து விலகுவதற்காக கடந்த ஆண்டு இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி 34 அதிகாரிகள் மற்றும் 8843 படைவீரர்கள் சட்டரீதியாக விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here