அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக செயற்படும் முத்தையா முதளிதரன் பல்லேகலை விளையாட்டு மைதானத்தில் தன்னிச்சையாக நடந்துகொண்ட முறைமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் பயன்பாட்டுக்காக தயார்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆடுகளத்துக்கு அருகில் பலவந்தமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரான சரித் சேனாநாயக்கவுடன் வாக்குவாதத்தில் முரளிதரன் ஈடுபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.