தோட்டத்தொழிலாயர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையை மாற்றினால் அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் சிபாரிசி செய்துள்ள 1700 ரூபா சம்பளத்தினை விட வழங்க முடியும் என பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாக பணிப்பாளர் ரொசான் ராஜதுறை தெரிவித்துள்ளார்.
ஹேலிஸ் நிறுவனம் நேற்று 01.03.2025 ரதல்ல பகுதியில் ஒழுங்குசெய்திருந்த தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாங்கள் 1700 ரூபா சம்பளம் வழங்கவதற்கு ஒரு போதும் இது வரை இணக்கம் தெரிவிக்கவி;ல்லை. நாங்கள் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக உற்பத்தியினை அடிப்படையாக கொண்ட சம்பள முறைமை ஒன்றினை அமுல்படுத்துமாறு தெரிவித்து வருகிறோம் அதனை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் இவ்வாறு தெரிவித்ததா என்பது எமக்கு தெரியாது ஆனால் தேயிலை தோட்டங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கட்டாயம் சம்பளம் வழங்கும் முறைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் காரணம் 150 வருடங்களுக்கு முன் இருந்து முறைமை தற்போது பொருத்தமற்றது இன்று உலகில் தேயிலை உற்பத்தி முறைகளும் சம்பள முறைமைகளும் மாற்றம் அடைந்துள்ளன.அன்று வேறு தொழில் இருக்கவில்லை முகாமையாளர்களின் முகாமைத்துவத்திற்கமைய தொழிலாளர்கள் தொழில் புரிந்தார்கள் இன்று அந்த நிலை மாற்றம் அடைந்துள்ளன.
நாங்கள் 1700 ரூபா சம்பளம் வழங்குவதற்று விருப்பம் இல்லாமல் இல்லை ஆனால் தற்போதுள்ள உற்பத்தி செலவுக்கும் உலக சந்தையில் தேயிலை விலையில் உள்ள மாற்றத்திற்கும் ஏற்ப அந்த அளவு சம்பளம் வழங்க முடியாது என்றே தெரிவிக்கிறோம்.
தொழிலாளர்கள் காலை 8 மணிக்கு சென்று நான்கு மணி வரை இருந்து 20 கிலோ தேயிலையே பறிக்கின்றனர் இந்த நிலை மாற வேண்டும் அவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் காலையில் சென்று 20 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை பறிக்க முடியும் அவர்கள் நான்கு மணிவரை இருக்க வேண்டியதில்லை இன்று சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நான்கு மணித்தியாலங்களில்; 30 கிலோ தேயிலையினை பறிக்கிறார்கள் அதனை எமது தோட்டத்தொழிலாளர்களுக்கு பறிக்க முடியும். ஆகவே தோட்டங்களிலும் உற்பத்தியை அடிப்படையாக கொண்ட ஒரு முறைமையினை உருவாக்கப்பட வேண்டும்.
உலகில் இன்று தேயிலையின் விலை 100 ரூபாவால் குறைவடைந்துள்ளது குறைவடையும் போது சம்பளம் அதிகரிக்கும் முறையினை உலகில் எந்த நாட்டிலும் மேற்கொள்ளப்பட வில்லை ஆகவே உற்பத்தியினை அடிப்படையாக கொண்ட ஒரு முறைமையினை உருவாக்கினால் அதிக சம்பளத்தினை பெற முடியும் தொழிலாளர்களும் காலையிலிருந்து மாலை நான்கு மணிவரை இருக்க வேண்டிய அவசிமில்லை. குறிப்பிட்ட அளவை விட அளவினை பறித்து விட்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்து ஓய்வு எடுக்கலாம் அல்லது வேறு வேலையில் ஈடுபடலாம் இதனால் அவர்களின் பிள்ளைகளையும் பராமறிக்க முடியும் அத்தோடு அவர்கள் வருமானத்தினையும் பெற முடியும் இதனை நாங்கள் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்துள்ளோம். அரசாங்கமும் இதன் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்து வருகிறது என நாம் நம்புகிறோம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்