கொத்மலை போக்குவரத்துக்கு சபைக்குட்பட்ட பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலைக்கு செல்லும் பேருந்து முறையான நேரத்தில் இன்மையால் பூண்டுலோயா நகரில் தினந்தோறும் பதற்றமான சூழ்நிலை உருவாகின்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலை உட்பட கண்டி, கம்பளை, புஸல்லாவ, வட்டக்கொடை, மடக்கும்புர ஆகிய பகுதிகளுக்கு அதிகமான மக்கள் தினந்தோறும் செல்கின்றனர்.இந்நிலையில் பேருந்துக்காக மணித்தியால கணக்கில் காத்துகிடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதோடு நகரத்திலும் சன நெரிசல் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதோடு குறித்த நேரத்தில் பேருந்து சேவையை முன்னெடுக்க கொத்மலை போக்குவரத்தை சபை முன்வரவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நீலமேகம் பிரசாந்த்