முல்லைத்தீவில், உணவகமும் பாதணி கடையும் தீயில் கருகின!

0
31

முல்லைத்தீவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (16) ஏற்பட்ட தீயில் உணவகமும் பாதணி கடையும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப் பிரிவு இல்லாத காரணத்தினால், இராணுவம், பொலிஸார், அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து தீயினை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, நிலைமையை பார்வையிட்டனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ பரவல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here