‘மூக்குத்தி அம்மன் 2’ எப்போது ரிலீஸ்?

0
8
dailythanthi

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றி கண்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜிக்கு பதிலாக, இந்த முறை இயக்குநர் சுந்தர்.சி இயக்கி வருகிறார்.

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் 2ம் பாகம்
இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோருடன் யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.

நயன்தாரா ஆவலுடன் எதிர்பார்ப்பு
இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் தியேட்டர் வெளியீட்டை நடிகை நயன்தாரா ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்டம், உணர்வுபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ள இப்படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான மைல்கல்லாக இருக்கும் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

நகைச்சுவை, பிரம்மாண்டம், பேண்டசி போன்ற அம்சங்களின் கலவையாக இப்படம் ரசிகர்களை வலுவாக சென்றடையும் என்று படத்தில் டைரக்டர் சுந்தர்.சி கருதுவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரிலீஸ் எப்போது?
அதேவேளை, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி. தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் ஏற்கனவே ‘ஹாய்’ மற்றும் ‘டாக்ஸிக்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் இந்த வருடம் வெளியாக உள்ளதால் நயன்தாராவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here