மூன்று நாட்களில் வீட்டிற்கு வரும் கடவுச்சீட்டு

0
112

கடவுச்சீட்டுகளை இணைய வழியாக (Online) விண்ணப்பித்து, மூன்று நாட்களுக்குள் வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த முறையின் கீழ் கடவுச்சீட்டுகளை மூன்று நாட்களுக்குள் வீடுகளுக்கே தருவித்துக்கொள்ள முடியும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான பணத்தையும் இணையவழி ஊடாக செலுத்த முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடவுச்சீட்டு பெறுவோர் , கைவிரல் அடையாளத்தை அருகிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் வழங்க முடியுமெனவும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here