தம்புள்ளை – பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்னால் நிர்மானிக்கப்பட்டுக் கொண்டிருந்த மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தனியார் வர்த்தக கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இந்த கட்டடத்தின் மூன்றாம் மாடிக்கு கொங்கிரீட் இட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கட்டடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.