கண்டியில் (Kandy) பட்டதாரி யுவதி ஒருவர் மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த (Hunnaskiri Rambukpotha) பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா (Philip Nagma) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே இந்த மரணத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயிரிழந்த யுவதியின் தந்தை மேலும் தெரிவிக்கையில், “எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார்.அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பட்டப்படிப்பை முடித்து கிராம அதிகாரி பரீட்சையில் தோற்றி கிராம அதிகாரி பரீட்சையில் சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள்”என அவர் தெரிவித்துள்ளார்.