மெக்சிகோவில் கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு – மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

0
73

இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களில் பெருமளவான சிறுவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், சுமார் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மெக்சிகோவின் Ciudad Madero நகரிலுள்ள Santa Cruz தேவாலயத்தின் கூரையே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கூரை இடிந்து விழுந்த சந்தர்ப்பத்தில் சுமார் 100 பேர் தேவாலயத்திற்குள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களில் பெருமளவான சிறுவர்கள் இருப்பதாக நம்பப்படும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here