மெக்சிகோவை புரட்டி எடுத்த சூறாவளி! – 10 பேர் பலி; பலர் மாயம்!

0
161

அமெரிக்க கண்டத்த்தில் உள்ள மெக்சிகோ நாட்டை சூறாவளி தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

வட அமெரிக்காவின் தெற்கே அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா என்ற மாகாணத்தை சக்திவாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியுள்ளது. இந்த சூறாவளிக்கு அஹதா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி தாக்கியதால் மெக்சிகோவின் அஹ்சகா பகுதியில் பலபகுதிகளை சூறை காற்றுடன் கனமழை பெய்துள்ளது. பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். 20க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here