மெய்வல்லுனர் போட்டியில் அக்கரபத்தனை பிரதேசத்திற்கு வெங்கல பதக்கம்!

0
204

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் எற்பாட்டில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி கண்டி போகம்புர சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தினை சேர்ந்த இராமகிருஸ்ணன் சந்திரமோகன் 35 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான நடத்தப்பட்ட 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டு 03ம் இடத்தினை பெற்று வெங்கள பதக்கத்தினை சுவீகரித்து அக்கரப்பத்தனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர்க்கான பயிற்சிகளை கரப்பந்தாட்ட வீரர் செல்லமுத்து பாலகிருஸ்ணன் வழங்கியூள்ளார். இவரை இப்பிரதேச மக்கள் வாழ்த்துகின்றனர்.

அக்கரபத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here