மெராயா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் 09A சித்திகளுடன் சாதனை
நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கடந்த வருட
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கோட்டத்துக்கு பெறுமை சேர்த்துள்ளார்கள்.
பரீட்சைக்கு தோற்றிய எழுபத்தாறு மாணவர்களில் கணித பாடத்தில் பதினான்கு ஏ தர சித்திகளும் ஐந்து B தர சித்திகளும்
இருபத்தொரு C தர சித்திகளும் இருபத்தாறு S தர சித்திகளும் அடங்களாக எண்பத்தேழு சதவீத பெறுபேற்றினை
பெற்றிருப்பதுடன் ஏனைய பாடங்கள் அனைத்திலும் நூறு சதவீத பெறுபேற்றினையும் பெற்றுள்ளனர்.
மாணவி சயந்தினி சிலம்பநாதன் 09A சித்திகளை பெற்றிருப்பதுடன் டீ.சதுர்த்தன் டி.யதுர்ஷினி ஜே.அனோஜன்.
டீ.நிர்த்திகாசியோறி. கே.சரசவி. ஜி.திஷாந்தினி. கே.சிறோமி. ஏ.மோகனவிஸ்வநாத். எஸ்.செந்தூரி. எஸ்.மதுஷா.
ஆகியோர் 06A 02B 01C சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.
பெறுபேற்றினை பெற்றுக்கொடுப்பதில் தியாகசிந்தையுடன் உழைத்திருக்கின்ற ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு
கொடுத்துள்ள பெற்றோர்களுக்கும் அக்கரையுடன் பங்குகொண்ட மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் .நல்லதம்பி
முத்துக்குமார் பாராட்டி கௌரவித்துள்ளதுடன் வெற்றிக்கு பக்கபலமாகவிருந்த வலயக கல்விப் பணிமனை மற்றும்
கோட்டக்கல்விப்பணி மனைக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
அக்கரப்பத்தனை நிருபர்