லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரேயா கேம்பிரி தோட்டத்தில் நீரோடையிலிருந்து ஆணின் சடலமொன்றை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர். கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய கிச்சான் என்பவரே இவ்வாறு இன்று (22) காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலையில் தனது குடியிருப்பு பகுதிக்கருகிலுள்ள நீரோடை பகுதியில் குளிக்க சென்றபோதே தவறி வீழ்ந்து மரணமாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீரோடையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை கண்ட பிரதேசவாசிகள் லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
மரண பரிசோதகர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் வைத்திய பரிசோதணைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்