மேதினத்துக்கு தயாராகும் மலையகம்!

0
110

மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தலவாக்கலை மற்றும் நுவரெலியா பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.
அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மேதினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

DSC06850ab (4)

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பி.திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் இம்முறை மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

(07.05.2018) திகதி தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை நகர சபை மைதானம் வரை மே தினப் பேரணியொன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு (06.05.2018) அன்று தலவாக்கலை நகரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது மே தின நிகழ்வுகளை நுவரெலியா நகரில் நடத்தவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக பிரிவு குறிப்பிட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பையும் இதன்போது மக்கள் வெளிப்படுத்துவர் எனவும் ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here