2021ம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் உள்ளிட்ட அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளும் இன்று சனிக்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன.
கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், உத்தரவை மீறி மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகளை நடத்துவோர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கேட்டுக்கொண்டுள்ளார்.