மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!!

0
130

மலையகத்தில் 07.04.2018 அன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பெய்த அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று 08.04.2018 அன்று திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நீண்டநாள் வரட்சியின் பின் நீரேந்தும் பிரதேசங்களுக்கு கன மழை பெய்ததனால் ஒரு சில நீர்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்ந்துள்ளது.

இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

DSC05586 DSC05587

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here