மே தின நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்ய தடை !

0
47

நாட்டில் மே 1 ஆம் திகதி புதன்கிழமை மே தின ஊர்வலங்கள் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது.

மதுபான விற்பனை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் செவ்வாய்க்கிழமை (30) வழக்கமாக மூடப்படும் நேரம் முதல் வியாழக்கிழமை (02) திறந்திருக்கும் நேரம் வரை மூடப்படும் என கலால் துறை செய்தித் தொடர்பாளர் மற்றும் சட்ட அமலாக்க ஆணையர் சன்ன வீரக்கொடி நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) கீழ் கலால் உரிமம் (FL 07, 08) பெற்று பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் விடுதிகள் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here