மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0
86

மோட்டார் சைக்கிள்களை திருடி உடனடியாக உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்தும் விடுகின்றார்கள் – உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்.

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்துள்ளதாகவும் , திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,

” யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் கடந்த சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விசாரணைகளின் போது , திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.அதானல் மோட்டார் சைக்கிள்களை மீட்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். ” என தெரிவித்துள்ளனர் .

மேலும் , மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, அவற்றுக்கு “ஹாண்டில் லொக்” போட்டு செல்லுமாறும் , மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here