யன்னல் இருக்கைக்காக நடுவானில் சண்டை போட்ட இரு குடும்பம்..!

0
143

பிரேசிலில் விமானம் ஒன்றின் ஜன்னல் இருக்கைகாக பயணிகளுக்கு இடையே நடந்த சண்டையை தடுக்க விமானத்தின் கேபின் குழுவினர் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெப்ரவரி 2ஆம் திகதி சால்வடாரில் இருந்து சாவ் பாலோ-காங்கோன்ஹாஸுக்குச் சென்ற கோல் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

சிறப்புத் தேவைகள் உள்ள தனது குழந்தையுடன் இருக்கைகளை மாற்றிக் கொள்ள முடியுமா என்று ஒரு தாய் மற்றொரு பயணியிடம் கேட்டபோது சண்டை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

சண்டை தீவிரமடைந்ததும் விமானக் குழுவினர் அதனை தடுக்க எப்படி முயன்றனர் என்பதைக் காட்டுகிறது.

பயணிகளால் வீடியோ எடுக்கப்பட்ட தொலைபேசி காட்சிகளில், ஒரு பெண் தனது க்ராப் டாப் கீழே இழுக்கப்படும்போது இருக்கையின் பின்புறத்தைப் பிடித்துக்கொண்டு, மேலாடையின்றி இருப்பதைக் காட்டுகிறது.

சண்டை முடிவுக்கு வந்த பின்னர், விமானத்தில் இருந்து சண்டையில் ஈடுபட்ட 15 பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

‘ஜி3 1659 விமானம் கடந்த வியாழக்கிழமை (02-02-2023) சாவ் பாலோவில் உள்ள சால்வடாரில் (எஸ்எஸ்ஏ) இருந்து காங்கோன்ஹாஸுக்கு (சிஜிஹெச்) புறப்படுவதற்கு முன்பு மோதல் நடந்ததாக கோல் ஏர்லைன்ஸ் அறிக்கையில் கூறியது குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here