யானை குட்டிக்கு ஹெட்லைட் அடித்து துன்புறுத்தியவருக்கு நேர்ந்த கதி

0
104

யானையொன்றைத் துன்புறுத்தும் காட்சி அடங்கிய வீடியோ, இன்றைக்கு 5 நாள்களுக்கு முன்னர், சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.தனது ஜீப் வண்டியின் முன் விளக்குகளை ஒளிரவிட்டு, யானையின் கண்களுக்கு வெளிச்சத்தை பாய்ச்சி துன்புறுத்தும் காட்சிகள் அதில் அடங்கியிருந்தன.

கடந்த 6ஆம் திகதியன்று பதிவிடப்பட்ட அந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்தக் காட்சிக்கு கடுமையான எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு, கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (10) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, அவருக்கு ரூ. 2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here