யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது!

0
99

யால தேசிய பூங்கா, செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையிலும் 45 நாட்களுக்கு மூடப்படும் என்றும் வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

யால தேசிய பூங்காவில் வசிக்கின்ற மிருகங்களின் இயற்கை நடத்தையில் எவ்விதமான இடையூறுகள் ஏற்படாத வகையிலும், பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலுமே குறித்த இந்தப் பூங்கா மூடப்படவிருக்கின்றது.

ஒவ்வொரு வருடங்களிலும் இந்தக்காலப்பகுதியில், யால தேசியப் பூங்காவை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here