யாழில் எச்சரித்த சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல்!

0
21

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களிடம் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (23) அன்று இடம்பெற்றுள்ளது .

வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவரே இவ்வாறு வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த நான்கு இளைஞர்கள் , பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு , அவர்களை தொந்தரவு செய்த நிலையில் அதனை அவதானித்த சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

இச் சம்பவத்திற்கு பின்னர் , திங்கட்கிழமை (23) அன்று குறித்த இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து, கொழும்புத்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தை மணியந்தோட்டம் பகுதியில் மறித்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here