யாழில் (Jaffna) சிறுமியொருவரை தாகத முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில்17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு தகாதமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை குறித்த சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.