யாழில் பதற்றம் – ஒருதலை காதலால் பெற்றோல் குண்டு தாக்குதல்: ஐவர் வைத்தியசாலையில்

0
105

இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் வீடொன்றின் மீது இன்று அதிகாலையில் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தாடர்பில் தெரியவருவதாவது, .

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றில் மீது இன்று அதிகாலை 4.20 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டிலிருந்து யுவதியொருவரை காதலித்த நபரொருவராலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரும்பிராயை சேர்ந்த இளைஞன் ஒருவரும், அவருடன் வந்த குழுவினருமே தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய பின்னர், வீட்டுக்குள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.

உரும்பிராயை சேர்ந்த இளைஞன், அந்த வீட்டிலுள்ள யுவதியில் ஒரு தலைக்காதல் கொண்டிருந்ததாகவும், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here