யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை மகள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நிலையில் இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதன்போது சத்திராஜா சவுந்திராணி என்ற தாய் உயிரிழந்துள்ளதுடன் 23 வயதுடைய சங்கீதா என்ற மகள் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.