யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் ?

0
98

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் ஊடான விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தற்போதய பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்த எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவித்தல்களும் அரசாங்கத்தின் தரப்பில் இருந்தும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here