யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, வெடிமருந்துகளை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வெடிமருந்துகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.