யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு இன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
போரின் போது சேதமடைந்த யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு மேலும் புதிய வசதிகளுடன் இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதனை இன்று யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவார் என்று இந்தியப் பிரதமரின் செயலகம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்