பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்ததை,உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமல்,போன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். நகரை அண்டிய பகுதியொன்றில் பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையமொன்றை நடத்திவந்த ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகரினால் இப்பால் உற்பத்தி விற்பனை நிலையம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது,
பழுதடைந்த ஒரு தொகை தயிர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
விற்பனை நிலையத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டது.