யாழ்.பல்கலைக்கழக மோதல் நிலைமை குறித்து கண்டறிய 4 பேர் கொண்ட குழு நியமனம்!

0
94

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கண்டறிய நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரத்னத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவின் தலைவராக சிங்கள இனத்தவரான சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வைத்தியர்கள் இருவரும் மற்றும் பொறியியலாளர்கள் இருவரும் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இவர்கள் சகலரும் நிருவாகக் குழு உறுப்பினர்கள்.

அத்துடன், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாதாந்த கூட்டம் இம்முறை எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here