யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியை காணவில்லை!

0
178

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தொியவந்துள்ளது. யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

காய்ச்சல் காரணமாக கடந்த 16ம் திகதி சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோய் தீவிரமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மறுநாள் 17ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவரது மனைவி சென்று பார்த்தபோது கணவனை அங்கு காணவில்லை. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் காவல்நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here