ரணிலுக்கு தக்க பாடத்தை புகட்ட தயார் – சவால் விடுத்துள்ள ஜேவிபி

0
19

பொதுத் தேர்தல் தமக்கு டெஸ்ட் துடுப்பாட்ட போட்டி என்றால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு நாள் போட்டியாக மாற்றிக்கொள்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால்,ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெல்வோம். டெஸ்ட் போட்டியை விரைவில் நடத்த வைப்போம்.

ரணில் விக்ரமசிங்க எமக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலை வழங்காமல் இருந்தால், நாங்கள் வீதியில் இறங்கி ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம். ரணிலுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிப்போம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து போட்டியிட்டு வெல்ல போவதாக பசில் ராஜபக்ச கூறுகிறார்.

பெரிய வெள்ளம் ஏற்பட்டால், பாம்பும், கீரியும் ஒன்றாக ஒரு துடுப்பில் ஏறிச் செல்லும் என்ற கதையை போல பசில் ராஜபக்சவின் ,இந்த கதை இருக்கின்றது எனவும் ரில்வின் சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here