ரணிலைக் கண்டு அஞ்சினாராம் பிரபாகரன்! : நலின் பெருமிதம்

0
140

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், மஹிந்தவைவிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே அஞ்சியதாகவும், 2005ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சி மலர்ந்திருந்தால் 2009ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தம் நிறைவு செய்யப்பட்டிருக்கும் என்றும், தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

”பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை காட்டி கொடுப்பதாக பொது எதிரணியினர் கூறுகின்றனர். இனவாதத்தை கொண்டுதான் இவர்களது அரசியல் வடிவமைந்துள்ளது.

எனவே இவர்கள் இனவாத வியாபாரம் செய்கின்றனர். இந்த வியாபாரத்தை கொண்டு வெற்றி பெற இயலாது.

அத்துடன் பிரதமர் எப்போதும் நாட்டை காட்டி கொடுக்க மாட்டார். விடுதலை புலிகளுக்கு எதிராக மூளையைக்கொண்டு யுத்தம் செய்தவரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கே அஞ்சினார்.

2005ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சி மலர்ந்திருந்தால் 2009ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்ததை நிறைவு செய்திருப்பார்.” என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here