ரம்பொடை லிலஸ்லேண்ட தோட்டத்தில் அனர்த்ததில் பாதிப்படைந்த 103 குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு உலருணவு பொருட்களை அமைச்சர் ரங்கே பண்டார வழங்கிவைத்தார்
ரம்பொடை லிலஸ்லேண்ட தோட்டத்தில் இயற்கை அனர்த்ததில் இடம்பெயர்ந்த 103 குடும்பங்களை அமைச்சர் ரங்கே பண்டார பார்வையிட்டார்.
ரம்பொடை பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புகுள்ளாகியவர்களை இடர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார 27.05.2018 நேரில் சென்று பார்வையிட்டார்.
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க லிலஸ்லேண்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் இடம் பெயர்ந்துள்ள 103 குடும்பங்களைச் சந்தித்த அமைச்சர் ரங்கே பண்டார நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
இதன்போ து பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ மாகாண சபை உறுப்பினர் சோ.ஶ்ரீதரனும் கலந்து கொண்டனர்.
மேலும் பாதிப்புக்குள்ளாகிய குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகளை அமைப்பதற்கு அமைச்சர் திகாம்பரத்தினூடாக நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்டோர் மத்தியில் அமைச்சர் தெரிவித்தார்.
மு.இராமச்சந்திரன்