கடுகண்ணாவ ரயில் நிலையத்துக்கருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டியிலிருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயில் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அக்குரஸ்ஸ – கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபரே உயிரிழந்தவராவார். இந்நிலையில் மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியிலும் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.




