பதுளை இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 .55 மணி அளவில் கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில் முன் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.பதுளை தெய்வனெவெல பகுதியில் சுரங்கத்துக்கு அருகாமையில் ரயில் சென்று கொண்டிருந்த வேளை, சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து மரணித்துள்ளார்
குறித்த நபர் அடையாளம் காணப்படாத போதிலும், சடலம் தற்போது பதுளை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
குறித்த நபர் மரணித்தமைக்கான காரணத்தை கண்டறியும் முகமாக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்