ரவிசங்கர் குருஜி எதிர்வரும் 18 ஆம் திகதி நுவரெலியா வருகிறார்

0
101

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் மே 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருகின்றார் வாழும் கலை பயிற்சியின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி.

இவர் தனது வருகையை உறுதி செய்துள்ளதாக சீதைம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

“ நானும் எங்களுடைய ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களும் கடந்த மாதம் இந்தியாவின் பெங்களுர் நகரிற்கு விஜயம் செய்து வாழும் கலை பயிற்சியின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை அவருடைய ஆசிரமத்தில் சந்தித்து எங்களுடைய ஆலய கும்பாபிஷேக நிக்ழவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினோம்.

குருஜி அழைப்பிதழை பெற்றுக் கொண்டு தன்னுடைய வருகையை மிகவிரைவில் உறுதிப்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்திருந்தார். அதற்கு அமைய அவர் தற்போது தான் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார்.எனவே நாம் அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம்.

குருஜி 18 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்து அங்கிருந்து அன்று மாலை நுவரெலியாவை வந்தடைந்து ஆலயத்தின் என்ணெய் காப்பு நிகழ்விலும் கலந்து கொள்கின்றார்.அதனை தொடர்ந்து அடுத்த நாள் நடபெறுகின்ற மஹா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்கின்றார்.கும்பாபிஷேக நிகழ்வில் கோயம்புத்தூர் நகரில் இருந்து வருகை தருகின்ற சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதியும் கலந்து கொள்கின்றார்.

அத்துடன் இலங்கை நாட்டின் பிரதமர் தினேஸ் குணவர்தன உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்து வருகை தருகின்ற பல முக்கியஸ்தர்களும் கலந்து கொள்கின்றார்கள்.” – என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here