மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில பகுதியில் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒரு காயமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.கவரவில தோட்டத்திலிருந்து அட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டி 22.03.2018 அதிகாலை கவரலில தோட்டப்பாதையில் பயணித்துகொண்டிருந்த போதே 60 அடி பள்ளத்தில் பாய்ந்து அட்டன் பிரதான பாதையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுக்குள்ளானதாகவும் அதிக முகில் கூட்டம் நிறைந்த காலநிலை காணப்பட்டமையினாலே சாரதியின் கட்டுபாட்டை மீறி விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்