ரஷ்யா நேட்டோவைத் தாக்கக்கூடும் – உளவுத்துறை தகவல்!

0
14

ரஷ்ய – உக்ரைன் மோதல் முடிந்ததும் ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்கக்கூடும் என்று ஜேர்மனியின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்,

ரஷ்யாவின் இறுதி இலக்கு “நேட்டோவை 1990களின் பிற்பகுதியில் இருந்த இடத்திற்குத் திரும்பத் தூண்டுவது” மற்றும் அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றுவது என்று வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பின் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும், முதலில் ரஷ்யாவை நேட்டோ நாடுகள் தாக்காவிட்டால், நேட்டோ நாடுகளைத் தாக்கும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

இதேவேளை உக்ரைனுக்கு மேற்கத்திய இராணுவங்கள் உதவி செய்வது நேட்டோவை மோதலில் நேரடி பங்கேற்பாளராக ஆக்குகிறது என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியின் புதிய சான்சலரான பிரீட்ரிக் மெர்ஸின் கீழ், ஜேர்மனி ரஷ்யாவிற்கு எதிரான தனது விரோதப் போக்கை அதிகரித்துள்ளதோடு உக்ரைனுக்கு மேலும் 5 பில்லியன் யூரோக்களை ஜேர்மனி வழங்குவதாக உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here