நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும் திருமணத்தின் பின்னர் மனைவியுடன் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை நிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.