ராகலை பகலவத்தை தோட்டத்தில், பெண் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனே இந்த பெண்ணை பொல்லால் தாக்கி கொலை செய்தார் என தெரியவருகிறது.
இராமலிங்கம் மகேஸ்வரி (வயது 41) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மது போதையில் வீட்டுக்கு வந்த கணவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் பின்னர் அது, கைகலப்பாக மாறி பொல்லொன்றினால் மனைவியை தாக்கினார் இதில் தலையில் பலத்த காயமுற்ற மனைவி கொல்லப்பட்டார் என விசாரணைகளில் தெரியவருகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பெண், அயலவர்களின் உதவியுடன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் போது, வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.