சிறுவர்களுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை மருத்துவர்கள் திடுக்கிடும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் 20% வீதமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையே போஷாக்கின்மைக்குக் காரணம் எனக் கூறப்பட்டாலும், சிறுவர்களுக்கு அதிகளவு காய்கறிகளை உண்ணக் கொடுத்தால் இந்த நிலைமையைத் தவிர்க்க முடியும் என்று மருத்துவமனையின் மருத்துவர் வைத்திய கலாநிதி தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்
கடந்த வாரம் மருத்துவமனையின் சிகிச்சைக்கூடம் 2இல் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவர்களை பரிசோதித்தபோது 53 பேரில் 20 வீதமானோருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தை கண்டறியப்பட்டது.
அதிலும் பாதி பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவர்களின் நிறை மற்றும் உயரம் என்பன குறைந்திருந்தமை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக வைத்திய கலாநிதி பெரேரா கூறியுள்ளார்.
சிறுவர்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் விட்டமின்களை தேவையான அளவுகளில் பெறாததே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.